நாம்
ஒருவருக்கு ரகசியம் சொல்லவேண்டும்
என்றால் அந்த நபரை அழைத்து
அவர் காதின் அருகே சென்று
அவர் காதுக்கும் நம் வாய்க்கும்
உள்ள இடைவெளியை மறைத்து "அந்த
blue சுடி
போட்ட பொண்ணு ஒரு நாள்...."
என்று
உங்கள் ரகசியத்தை சொல்லலாம்.
அதே நபர்
பக்கத்து ஊரிலோ அல்லது பக்கத்து
நாட்டிலோ இருந்தால்?
போனில்
சொல்லலாம். ஈமெயில்
அனுப்பலாம். ஆனால்
ராஜா ராணி காலத்தில் என்ன
செய்திருப்பார்கள்?
கடிதம்
அனுப்பியிருக்கலாம்.
ஆனால் அந்த
கடிதத்தை கொண்டு செல்பவர்
அதை படிக்கக்கூடும் என்பது
இதில் உள்ள சிக்கல்.
ஒற்றர்களிடம்
இருந்து ராஜக்களுக்கோ அல்லது
ராஜாகளிடம் இருந்து ஒற்றர்களுக்கோ
இடையில் பரிமாறிக்கொள்ளும்
ரகசியங்கள் மற்றவர்களுக்கு
தெரிந்தால் தேசப்பாதுகாப்புக்கு
பிரச்சனை ஏற்படும்.
அதனால்
இந்த சிக்கலை தவிர்க்க ரகசியத்தை
மற்றவர்கள் புரியாதபடி உரு
மாற்றி codes மற்றும்
ciphers-களாக
பரிமாறிக்கொண்டனர்.
(எ.கா:
friends படத்தில்
கதாநாயகன் "காதல்
ஆசை" என்பதை
"ல்தகா
சைஆ" என்று
codes-ஆகா
கூறுவார்.) இப்படி
ஒரு செய்தியை code-ஆகா
மாற்றுவதை encryption என்று
அழைப்பர். மீண்டும்
இந்த code-ஐ
புரிந்துகொள்ளக்கூடிய
செய்தியாக மாற்றுவதை decryption
என்பர்.
அதே
சமயம் இப்படி மற்றவர்கள்
code-களாக
கடத்தப்படும் ரகசியம் தம்
கையில் கிடைத்தால்,
எப்படி
decryption செய்வது
என்று தெரியாத பட்சத்தில்,
அதன் மூலம்
எப்படி அதுனுள் இருக்கும்
ரகசியத்தை தெரிந்துகொள்ளலாம்
எனும் code breaking நுட்பமும்
கையாளப்பட்டது. இப்படி
ரகசியங்களை codes-ஆகா
மாற்றும் codemaker-களுக்கும்,
அந்த
code-கலில்
இருந்து ரகசியம் திருடும்
codebreaker-களுக்கும்
நடந்த அறிவு யுத்தம்,
வரலாற்றின்
பல பக்கங்களை செதுக்கி
இருக்கிறது.
செய்தியை
code-களாக
மாற்ற உபயோகிக்கப் பயன்படும்
code making நுட்பம்
என்னவென்று codebreaker-கள்
தெரிந்துகொண்டால் அதன் பின்
அந்த நுட்பத்தில் திருத்தம்
கொண்டு வரப்படும். அல்லது
வேறு ஒரு புதிய நுட்பம்
உருவாக்கம் பெரும்.
இப்படியே
இந்த முறை பல படிகளாக வளர்ந்து
இன்றைய தேவைகளான இன்டர்நெட்,
தொலைபேசி
போன்ற தொழில் நுட்பத்திற்கும்
பயன்படுகிறது. இப்படி
ரகசசியமாக செய்தி பரிமாறிக்கொள்ளும்
அறிவியல் நுட்பத்தை cryptography
என்றழைப்பர்.
இந்த
துறையில் பல சாதனைகள் புரிந்த
அறிவியலாளர்கள் மற்ற விஞ்ஞானிகளை
போல பொது வெளியில் தங்களின்
சாதனைகளை சொல்லிக்கொள்ள
முடியாது. காரணம்,
அவர்களின்
கண்டுபிடிப்புகள் ரகசியத்திலும்
ரகசியமாக இருக்கவேண்டும்.
இப்படிப்பட்ட
cryptography-இன்
பல பரிணாமங்களை கொண்ட வரலாற்றின்
ஒரு எளிய அறிமுகமே இந்த
புத்தகம்.



